Monday, November 25, 2013

பேய் பிசாசுமோகினி

பேய் பிசாசுமோகினி  
 

"ஏய் .சுதா ..நேத்து காஞ்சுரிங்(conjuring ) படம் பாத்தேன் டி.......ராத்திரி புல்லா தூங்கவே இல்ல தெரியுமா ?நீ பாத்துட்டியா ?" 

"நான் எப்பவோ பாத்துட்டேன் டி ?எனக்கு ஒன்னும் புதுசு இல்ல " 

"அடிபாவி !நா அந்த சூனியக்காரி மரத்துல தூக்கு போட்ட சீன்ல தியேட்டர் சிர்ல இருந்து கீழ விழுந்துட்டேன் தெரியுமா ?உனக்கு பயமா இல்ல ?"

"இல்லடி பழகிடுச்சி " 

"என்னடி இவ்ளோ சாதரணமா சொல்ற ?நீ பேய் பாத்துருக்கியா?" 

"ம்ம். .சொல்லவா ...பயபடுவியா?" 

சொல்லு டி ...மொக்கையா தான் இருக்கும் .பாப்போம் ...... 

"ஒரு நைட் ...கும் இருட்டு டி.. .நா எவனிங் கிளாஸ் முடிச்சு ப்ரிண்ட்ஸ் கிட்ட பேசிட்டு போவ டைம் ஆயிடுச்சு .......அப்ப உங்க வீட்டு பக்கத்துல குறுக்கு வழில வந்தனா......." 

"ஏய் .என் வீட்டு பக்கதுலையா ஹேமா ......?அங்க பேய் இருக்கா..ஐய்யோ .பயமா இருக்கு டி ..உண்மையாவா?" 

ஏ குறுக்க பேசாத .கவனி ....அங்க ஒரு பெரிய தூங்கு மூஞ்சி மரம் இருக்குதுல்ல ...அதுல இருந்து அழுவற சத்தம் கேட்டுகிட்டே இருந்தது ....யாருன்னு தேடினேன் ........ 
திடிர்னு ஹா .ஹா ....ஹா ....சிரிக்கற சத்தம் ..... 
இது யாருடா டபுள் ரோல் நு பாத்தேன் ....... 
படக்குன்னு குதிச்சு ..... 

ஜல் .ஜல் ...ஜல் ...." 

"என்னடி ஜல் .......ஊஊ ." 

"அந்த உருவம் நகந்துச்சு டி ..." 

அது எப்படி இருந்துது ? 

"நல்லா பவர் சோப்பு விளம்பரத்துல வர மாதிரி .வெள்ளை புடவை .... 
மீரா ஷாம்பூ விளம்பரத்துல வர மாதிரி நீட்டு கூந்தல் .....முகம் பூரா செகப்பு .கிளோஸ் அப் பல் ..நடுவுல பெரிய நாக்கு ......அதோட வயறு வரைக்கும் இருந்துச்சு ........கண்ணு காஜல் அகர்வால் மாதிரி பெருசா இருந்துச்சு .....காலே இல்ல ." 

போதும் டி ....நா வீட்டுக்கு தனியா போகணும் ...வேணா.அழுதுடுவேன் ,,,,,,ஊ ஊ ... 

இருடி ....முழுசா கேளு ...... 

நீ அத பாத்து .ஓடிட்டியா ? 

யாருன்னு நினச்ச என்னை.நா நம்ப maths மிஸ் கே பயப்பட மாட்டேன் .கேவலம் இதுக்கு போயா... 

இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம் டி ...அது உன்ன ஒன்னும் பண்ணல? 

அது என்னை உத்து பாத்துச்சு ...கிட்ட வந்துச்சு .நான் மத்ஸ் மிஸ் சொல்லித்தந்த போர்முலா எல்லாம் சொன்னேன் .... 

இன்னும் கிட்ட வர ஆரம்பிச்சிடுச்சு .....அப்பத்தான் ... 
அப்பத்தான் .....விஜய் நாபகம் வந்துச்சு ..... 

உடனே ஆரம்பிச்சேன் பாரு ... 
ஓடவா? 
இல்லடி. 
பாட ..... 
"நா அடிச்ச தாங்க மாட்ட ....நாலு நாளு தூங்க மாட்ட ..நீ ஒழுங்க வீடு பொய் சேர மாட்ட ....."பாடு வேற மறந்துடுச்சு .உடனே இங்கிலீஷ் மெமரி போஏம் ல சொல்லி பாத்தேன் " 

பேய் இருந்துச்சா? 
நிக்குமா அப்புறம் ....முதல் வரிக்கே முக்கா கிலோ மீட்டர் பின்னாடியே தலைய வேணான்னு ஆடிகிட்டே போய்டுச்சு " 
விஜய் நா சும்மாவா ? 

கிரேட் தாண்டி நீ ? 

அதோட முடிஞ்சுதா?என் முதுவுல ஓங்கி யாரோ அடிச்சாங்க ?திரும்பி பாத்தா ..... 

அதன பாத்தேன் ....பேயாவது போறதாவது .....அச்சச்சோ ...அடி பலமா ? 

ஆமா டி ...எங்க அம்மா அடியச்சே...."எரும ஸ்கூல் டைம் ஆயிடுச்சு ...பேய் தூக்கம் தூங்கரத பாருன்னு திட்டிக்கிட்டே எழுப்பிட்டாங்க " 

போடி .......இதுக்கு காஞ்சுரிங் எவ்ளோ தேவலாம் ...